Sunday, January 31, 2010

பொதக்குடியில்ஒருவர் வெட்டிக் கொலை

கூத்தாநல்லூர் அருகே ஒருவர் வெட்டிக் கொலை

First Published : 01 Feb 2010 06:06:00 AM IST
Last Updated :
திருவாரூர்,​​ ஜன.​ 31:​ திருவாரூரை அடுத்துள்ள பொதக்குடியைச் சேர்ந்த கமாலுதீன் மகன் ஹாஜா பகுருதீன் ​(42).​ இவரும்,​​ கூத்தாநல்லூரைச் சேர்ந்த குல்முகமது மகன் ஜகபர்தீன் ​(36) என்பவரும் நண்பர்கள்.
​ ​ இந்நிலையில்,​​ கடந்த 2001-ம் ஆண்டு,​​ பகுருதீனுக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை ஜகபர்தீன் தாக்கி சேதப்படுத்தினாராம்.​ இந்த வழக்கில் ஜகபர்தீன் எதிரியாகச் சேர்க்கப்பட்டு,​​ வழக்கு நடைபெற்று வருகிறது.
​ ​ இதற்கிடையே,​​ கடந்த 2007-ம் ஆண்டு வழக்குச் செலவுக்காக ரூ.​ 50,000 ​ வேண்டும் என ஜகபர்தீன் கேட்டாராம்.​ பணம் தர பகுருதீன் மறுத்ததால்,​​ அப்போதிலிருந்து இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.​​ இந்நிலையில்,​​ ஞாயிற்றுக்கிழமை பொதக்குடிக்கு வந்த ஜகபர்தீனை,​​ பகுருதீன் உள்ளிட்ட 5 பேர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.​ ​ இதில் பலத்த காயமடைந்த ஜகபர்தீன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
​ ​ ​ கூத்தாநல்லூர் போலீஸôர் வழக்குப் பதிந்து,​​ ஹாஜா பகுருதீன்​​ உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
நன்றி திணமணி

கூத்தாநல்லூர் ஏ.ஆர்., ரோட்டைச் சேர்ந்தவர் குல்முகம்மது மகன் ஜெகபர்தீன் (35). இவரது குழந்தைக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு, அருகிலுள்ள டாக்டரிடம் காண்பிக்கப்பட்டு குழந்தை இறந்தது. இதுபற்றி, ஜெகபர்தீன், அவரது நண்பர் ஜமாத் தலைவர் கமாலுதீன் மகன் பக்ருதீன் (35) என்பவர் மருத்துவமனையில் விவாதம் செய்தார். இப்பிரச்னையில் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் ஜெகபர்தீன், பக்ருதீன் ஆகியோர் மீது ழக்குப்பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ஜெகபர்தீனை கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி என்ற இடத்தில் பக்ருதீன், அவரது உறவினர்கள் கமாலுதீன், அபுதாகீர், ஜெய்னுலாபுதீன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். நான்கு பேரும் தலைமறைவாக உள்ளனர். கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நன்றி தினமலர்

1 comments:

Nishar CANDY said...

hai i'm one of the member of Good Luck & my name is Nishar Candy.....
Pls add photo of murder which happened in podakkudi..