
தலைப்பு இல்லாமலும் படிக்கலாம
தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்....
இப்போது பள்ளிபடிப்பு முடிந்து என்னபடிக்கலாம் என பசங்க குழப்பத்திலும் / தெளிவிலும் இருக்கலாம். இதில் வீட்டில் பெரியவ்ர்களின் பங்கு மிக முக்கியம்.நான் "சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..இதிலெ இவன் படிக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியாது" என அடம் பிடித்தால் ஒரு இலக்கு இல்லாத சந்ததியினரை உருவாக்குகிறீர்கள என சரித்திரம் / பூகோளம் எல்லாம் உங்களை வைய்யும்.
பசங்க இப்போது 'மார்க்கெட் நிலவரம்' தெரியாமல் 'பெருவாதிபேர்' படிக்கிறார்கள்.
தலைப்பு இல்லாமலும் படிக்கலாம்....
இப்போது பள்ளிபடிப்பு முடிந்து என்னபடிக்கலாம் என பசங்க குழப்பத்திலும் / தெளிவிலும் இருக்கலாம். இதில் வீட்டில் பெரியவ்ர்களின் பங்கு மிக முக்கியம்.நான் "சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது..இதிலெ இவன் படிக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியாது" என அடம் பிடித்தால் ஒரு இலக்கு இல்லாத சந்ததியினரை உருவாக்குகிறீர்கள என சரித்திரம் / பூகோளம் எல்லாம் உங்களை வைய்யும்.
பசங்க இப்போது 'மார்க்கெட் நிலவரம்' தெரியாமல் 'பெருவாதிபேர்' படிக்கிறார்கள்.
மச்சான் படிக்கிறான் / தெரு பையன் படிக்கிறான் என்று விலை போகாத படிப்புகள் / பட்டங்களில் நமது மாணவர்கள் ரொம்ப ஜல்லியடிக்கிறார்கள்.
"எஸ்கிமோட்டெ யான் தம்பி ஐஸ்கிரீம் விக்கனும்?"- அனுபவமிக்க ஒரு பெரியவர்- முத்துப்பேட்டையை சார்ந்தவர்.
இப்படித்தான் ஒருவன் ஜவுளிகடை திறந்தால் இன்னொருவனும் அதையே திறப்பது, நகை கடை திறந்தாலும் பக்கத்திலேயே அதே மாதிரி திறந்து நாசமாக போவது என அதே தவறை திருப்பி திருப்பி செய்து கொண்டிருகிறோம்.
சரி உறுப்படியாக என்ன செய்யலாம்..இப்போது Educational Fair தமிழ்நாட்டிலும் வர ஆரம்பித்து விட்டது.இதற்க்கு முன்னோடியாக இருந்தது சிங்கப்பூர் / மலேசியா / யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகள். சமீபத்தில் திருச்சி / சென்னையில் நடந்தது என நினைக்கிறேன். இதுபோன்ற இடங்களுக்கு உங்களக்கு தெரிந்த / தெரியாத யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். வருங்காலத்தில் அந்த பையன் 'கல்வி கண் திறந்த மாமனிதர்' பட்டம் உங்களுக்கும் தரலாம்.
பசங்களிடம் " அந்த காலத்து SSLC இந்த காலத்து M.A & M.Sc க்கு சமம் தெரியுமா?' என்று பன்ச் டயலாக் எல்லாம் பேச வேண்டாம். நீங்கள் அப்போது படித்த செலபஸ் இப்போது உள்ள பல்கலைகழகங்களின் காம்பவுன்டை தாண்ட கூட பத்தாது.
ஏவியேஷன் இன்டஸ்ட்ரி இப்போது மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. Aircraft Engineerss & Aeronatical Engineers / தேவைகள் அதிகம். பெட்ரோலியம் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி Petrolium Exploration Engineer தேவையை அதிகப்படுத்தி இருக்கிறது. மருத்துவம் சார்ந்த துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் & Stem Cell Reserach நிறைய நல்ல எதிர்காலத்தை உறுதியளிக்கிறது. Air Force Cadet Engineer சேர்ந்த்தால் அப்பாயின்ட்மென்ட் வரை Air Force செலவு செய்கிறது.
வளர்ந்து வரும் Financial Sector இப்போது உலகளாவிய ரீதியில் Financial analyst & Actuary க்கு பணம் அள்ளித்தருகிறது.
நன்றாக சம்பாதித்து வெளிநாட்டு சென்ட் எல்லாம் பர்மா பஜாரில் வாங்கிக்கலாம்.
இதற்கெல்லாம் நிறைய வெப் லின்க் இருக்கிறது. கொஞ்சம் நேரம் செலவு செய்து ரிசேர்ச் செய்ய வேண்டும்.
உயர்கல்வி தொடர நினைக்கும் மாணவர்கள் தயவு செய்து மண்ணடி தான்டாத காக்கா , புளிய மரத்தில், ரயிலடியில் உட்கார்ந்து சவடால் விடும் ஆட்களிடம் ஐடியா கேட்க வேண்டாம்.
19 - 25 வாழ்க்கையின் இலக்கை சரியாக நிர்ணயம் செய்யும் வயது. அப்போது போய் பசங்களுக்கு பொண்ணு பேசி அவனுக்கு மனதுக்குள் மத்தாப்பு வர வைத்து படிப்பில் கவனம் செலுத்த விடாமல் [நம் ஊர் பெண்களும்] அவனுக்கு பசியார செய்து தருகிறேன் / பனியான் சுட்டு தருகிறேன் என சொல்லி அவனை மொத்தமாக ஓய்த்துவிடும் டெக்னிக் இதுவரை எனக்கு புரியாத புதிர்.
உயர்கல்வி ஒன்றே சமுதாய உயர்வுக்கு முக்கியம். விடுங்க........ அவய்ங்க படிக்கட்டும்
0 comments:
Post a Comment