
புதுடில்லி: விமான பயணிகளின் நலனை மேலும் பாதுகாக்கும் வகையில் விமான நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை விமான துறை அமைச்சகம் வடிவமைத்து வருகிறது. இதன் படி, இனி விமானம் தாமதமாக புறப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தக்க காரணமின்றி புறப்பாடு அட்டை மறுக்கப்பட்டாலோ, விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டி வரும்.
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், புதிய விதிமுறைகள் குறித்து அனைத்து விமான நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரும் என கூறினார். இதனால் விமானங்கள் தாமதமானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அனைத்து பயணிகளுக்கும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் நஷ்ட ஈடும், தங்குவதற்குறிய ஏறபாடுகளையும் செய்ய நேரிடும்.
0 comments:
Post a Comment